GuidePedia

டிகைகளை திருமணம் செய்வதற்கென்றே இந்த உலகில் அவதரித்திருப்பவர்கள் தான் இந்த தொழிலதிபர்கள் வர்க்கம்.
யாரைப் பார்த்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘அண்ணா…’(?) என்று அழைக்கும் நடிகைகள் மேற்படி தொழிலதிபர்கள் கூட்டத்தை மட்டும் அப்படி அழைப்பதில்லை.
அதற்கு என்ன காரணம் இருக்கும் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா?
நடிகை அசினும் ஒரு தொழிலதிபரின் காதலை வலையில் விழுந்த செய்திதான் இப்போது பாலிவுட்டில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அது செய்தியாக இருந்தாலும் பரவாயில்லை. புகைப்படமாக இருந்தால்..?
காருக்குள் அசின் ஒரு தொழிலதிபருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் இன்டெர்நெட்டுகளில் வேகமாக பரவி வருகிறது.
அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். அப்போது தான் ‘கஜினி’ படத்தை ஹிந்தியில் ‘ரீமேக்’ செய்த டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அதில் அசினை நடிக்க வைத்தார். அப்படியே பாலிவுட்டில் பிரபலமானவுடன் மும்பையிலேயே செட்டிலானார்.
சல்மான்கான், அமீர்கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆனால் தற்போது அவருக்கு ஹிந்தியில் படங்கள் இல்லை. மார்க்கெட் சுத்தமாக சரிந்து விட்டதால் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் காருக்குள் தொழில் அதிபருடன் காதல் கும்மாளத்தில் இருந்த படத்தை போட்டோகிராபர்கள் எடுத்துள்ளனர். மும்பையில் உள்ள பக்ரா தெருவில் இந்த படத்தை எடுத்துள்ளனர். காருக்குள் தொழில் அதிபருடன் நெருக்கமாக உட்கார்ந்து அசின் முத்தமிட்டுக் கொண்டு இருந்தாராம்.
போட்டோ கிராபர்கள் அதை கவனித்துவிட்டனர். அது அசின் என்பதையும் அடையாளம் கண்டனர். உடனடியாக கேமராவில் கிளிக் செய்தார்கள். இதை பார்த்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து பறந்து விட்டாராம் அசின். காருக்குள் இருந்த தொழில் அதிபர் யார் என்பது தான் இப்போதைக்கு மீடியாக்களைக் குடையும் மில்லியன் டாலர் கேள்வி?
இது போலியான புகைப்படம் என்ற வார்த்தையை மட்டும் அசின் சொல்லாமல் இருந்தா சரி


 
Top