வட இஸ்ரேலிலுள்ள கிறிஸ்தவ குடும்பமொன்றின் வீட்டிலுள்ள சிறிய கன்னி மரியாளின்
சொரூபமானது எண்ணெயை கண்ணீராக சிந்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனானிய எல்லைக்கு அண்மையிலுள்ள தர்ஷியா நகரிலுள்ள ஓஸாமா கோரி என்பவரது வீட்டிலுள்ள கன்னி மரியாள் சொரூபமே இவ்வாறு எண்ணெயை கண்ணீராக சிந்தி வருகிறது.
மேற்படி சொரூபம் அழுவது தொடர்பான செய்தி பரவியதையடுத்து அந்த அற்புதக் காட்சியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓஸாமாவின் வீட்டை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஓஸாமாவின் குடும்பத்தினர் இந்த சொரூபத்தைகடந்த வருடம் வாங்கியிருந்தனர்.
இந்நிலையில் ஒஸாமாவின் மனைவியான அமிரா அண்மையில் அந்த சொரூபத்தின் கண்களும் முகமும் எண்ணெயாக இருப்பதை அவதானித்து அதனை துடைத்துள்ளார்.
ஆனார் அவர் துடைக்கத் துடைக்க அந்த சொரூபத்தின் கண்களிலிருந்து எண்ணெய் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருந்துள்ளது.
இதனையடுத்து அமிரா அயலவர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த அயலவர் மேற்படி சிலையை பரிசீலனைக்கு உட்படுத்திய போது அந்த சிலை தூய எண்ணெயை சிந்துவது உறுதிப்படுத்தப்பட்டது.
அழும் கன்னி மரியாளின் சிலை தான் மேலும் அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்ற விசித்திர உணர்வை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக அமிரா கூறினார்.

Post a Comment