GuidePedia

0
வின்னிபெக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவில் வின்னிபெக் வின்டர் கிளப் ஸ்குவாஷ் தொடர் நடந்தது.
இதன் பைனலில், உலகின் 27ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் ஹெபா–எல்–டார்கியை எதிர்கொண்டார். முதல் செட்டை 13–11 என தவறவிட்ட ஜோஷ்னா, இரண்டாவது, மூன்றாவது செட்டை 11–8, 11–5 என மிக எளிதாக தன்வசப்படுத்தினார்.
இதற்கு நான்காவது செட்டை 11–3 என வென்ற ஹெபா, பதிலடி கொடுத்தார்.வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை, கடின போராட்டத்திற்கு பின் ஜோஷ்னா 12–10 என வென்றார். முடிவில், ஜோஷ்னா, 3–2 (11–13, 11–8, 11–5, 3–11, 12–10) என வெற்றி பெற்று, கோப்பை வென்றார். இது உலக அளவில் இவர் வெல்லும் முதல் பட்டம். இதன்மூலம் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த ஆண்டு நடந்த தொடரில் தீபிகா பல்லீகல் சாம்பியன் பட்டம் வென்றார்.

Post a Comment

 
Top