சுவிட்சர்லாந்தில், ஜூரிச் சாலஞ்ச் செஸ் தொடர் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் கெல்பாண்டை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 36வது நகர்த்தலின்போது, வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் நார்வேயின் கார்ல்சன், இத்தாலியின் காருணாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஆர்மேனியாவின் ஆரோனியனிடம் தோல்வியடைந்தார். இன்றைய ஐந்தாவது சுற்று போட்டியில் ஆனந்த், கார்ல்சனை எதிர்கொள்கிறார்.


Post a Comment