GuidePedia

0
 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க பிரபல பாடகியும் நடிகையுமான பியொன்ஸூக்கும் தீவிர காதல் உள்ளதாக  பிரான்ஸ் ஊடகமொன்று வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் மோட்டார் சைக்கிளில் தனது காதலியை இரகசியமாக சந்திக்க செல்வதை வெளிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கும் அவரது வாழ்க்கைத் துணையான வலேரி திரையர்வியலருக்கும் நிரந்தர பிரிவு ஏற்பட வழி வகை செய்த பிரான்ஸ் புகைப்படக் கலைஞரான பஸ்கல் ரொஸ்டெயின் இந்த சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டதோடு மேற்படி காதல் காரணமாகவே பராக் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிசெலுக்குமிடையிலான உறவில் அண்மைக் காலமாக விரிசல் விழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பராக் ஒபாமாவுக்கும் பியொன்ஸீக்குமிடையிலான காதல் தொடர்பு சம்பந்தமாக இந்த செய்தி ஐரோப்பிய வானொலியில் முதன் முதலாக கடந்த  திங்கட்கிழமை காலை ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
 
பாடகி பியொன்சினதும் அவரது கணவர் ஜே. கிஸட்டினதும் அபிமானிகளில் ஒருவராக பராக் ஒபாமா உள்ளதோடு ஒபாமாவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கான நிதி சேகரிப்பாளர்களாக பியொன்ஸூம் அவரது கணவர் ஜே.இஸட்டும் பணியாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
பராக் ஒபாமாவுக்கும் பியொன்ஸூக்குமிடையிலான  காதல் தொடர்பு முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தக் கூடியது என புகைப்படக் கலைஞர் பஸ்கல் ரொஸ்ரெயின் கூறியுள்ளார்.
 
பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலண்ட் தனது வாழ்க்கைத்துணையின்றி அமெரிக்காவும் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் வெளியான இந்த பரபரப்பு செய்தி குறித்து புகைப்படக் கலைஞர் ரொங்ரேயிடம் இது தொடர்பாக விசாரித்த போது அது ஒரு வேடிக்கை செய்தி என தெரிவித்துள்ளார்.
 
பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தின் போது பியொன்ஸ் அமெரிக்கா இஸ்பியூற்றி புல் என்ற பாடலைப் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top