GuidePedia

0

ஸாக்ஸபோன் இசைக்கருவியின் கண்டுடிடிப்பின் மூலம் ஜாஸ் மற்றும் ப்ளுஸ் இசையில் புரட்சியை ஏற்படுத்திய அடோல்ப் ஸாக்ஸ் அவர் பிறந்து சுமார் 200 வருடங்களின் பின்னர் தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தினைப் பெறவுள்ளார்.


அடோல்ப் ஸாக்ஸ் 1814 ஆம் ஆண்ட நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பெல்ஜியத்தில் பிறந்தவர். இவரின் தாய் நாடான பெல்ஜியமே தற்போது அவரது 200 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு கௌரவப்படுத்தி ஆங்கீகாரமளித்துள்ளது.

 

 

அடோல்ப் பிற்நத இடமான ப்ரூஸெல்ஸ் நகரிலுள்ள இசைக்கருவிகளின் நூதனசாலையில் ஸக்ஸ் 200 எனும் கண்காட்சி அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்து.

 


இதில் அடோல்ப்பின் படைப்புகள் மற்றும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலான விடயங்களும் அடங்கியுள்ளதாம். இக்கண்காட்சியானது அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
'இசையுலகில் இத்தனை பெரும் தாக்கத்தை ஸக்ஸபோன் செலுத்தும் என அதனை கண்டுபிடித்த அடோல்ப் ஸாக்ஸே நினைத்திருக்கமாட்டார்' என ஸக்ஸ் 200 கண்காட்சியின் அமைப்பாளர் க்ரே டுமௌலின் தெரிவித்துள்ளார்.

 

ஸாக்ஸின் தந்தை ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளராக இருந்தமையினால் ஸக்ஸும் அதன் பால் சிறுவயதில் ஈர்க்ப்பட்டார். தொடர்ந்து இசைக்கருவிகளை வாசிக்கவும் பழகிக்கொண்டு தன்னை ஒரு இசை கலைஞனாகவும் அடையாளப்படுத்தியவர் ஸாக்ஸ்.


1842 ஆம் ஆண்டு பெல்ஜியத்துக்கு குடியேறிய ஸாக்ஸ் 1946 ஆம் ஆண்டு ஸாக்ஸபோன் இசைக்கருவியை கண்டுபிடித்தார். 1894 ஆம் ஆண்டு தனது 79 ஆவது வயதில் இசை உலகின் புரட்சிக்கான இசைக்கருவி கண்டுபிடித்தது தெரியாமலேயே பிரான்ஸில் பாரிஸில் ஸாக்ஸ் மரணமடைந்தார்.

 


எதிர்வரும் வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இவரின் 200 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காகவே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பெல்ஜியத்திலுள்ள பிரதான பாலமொன்றில் பிரமண்டமான ஸாக்ஸபோன்களும் நிறுவப்பட்டுள்ளது.

 


Post a Comment

 
Top