GuidePedia

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும் பறந்து பறந்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார் மோடி. பாட்னாவில் அவர் பேச இருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவருக்கு பிரதமருக்கு வழங்கப்படும் விவிஐபி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள கிராமத்தில் கடந்த மாதம் மோடியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், லட்சம் பேருக்கு மேல் திரண்டனர். இதற்காக பெரிய மைதானத்தை தேர்வு செய்தார் இம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கர்.

மேடை ஏற்பாட்டை பார்வையிட ஒருமுறை அங்கு அவர் சென்றபோது, மைதானத்தின் மீது கழுகுகள் வட்டமிட்டு கொண்டு இருந்தன. அது ஏதாவது அபசகுனமாக இருக்குமோ என்ற அச்சப்பட்ட பரிக்கர், அருகில் இருந்த அதிகாரிகளிடம் கழுகு பறப்பதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு அவர், ‘இந்த பகுதியில் பாம்பு நடமாட்டம் அதிகம். அதனால்தான், அவற்றை பிடிப்பதற்காக கழுகுகள் வட்டமிடுகின்றன’ என்று கூறினார். இதை காதில் போட்டு கொண்ட பரிக்கர், ‘பாம்பு என்றால் படையும் நடுங்குமே... கூட்டம் நடக்கும்போது பாம்பு நுழைந்து விட்டால், மக்கள் பஞ்சாக பறந்து விடுவார்களே...’ என்று கருதினார்.

இதனால், ஓசைபடாமல் ஒரு காரியத்தை செய்தார். வனத்துறையை அழைத்து, பாம்பு பிடிக்கும் படை ஒன்றை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி, மோடியின் கூட்டம் நடைபெற்ற அன்றைய தினம் மைதானத்தை சுற்றி இந்த பாம்பு பிடிக்கும் படை யாருக்கும் தெரியாமல் நிறுத்தப்பட்டது. கூட்டத்தில் பாம்புகள் நுழைவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பரிக்கரின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பொந்துக்குள் இருந்து வெளியே வந்த இரண்டு பாம்புகளை, இந்த படை ஒரே அமுக்காக அமுக்கி தூக்கி சென்று விட்டது. இதனால், கூட்டம் அசம்பாவிதம் இல்லாமல் நடந்து முடிந்தது.

மோடியிடம் கூட கூறாத இந்த ரகசியத்தை, பனாஜியில் நேற்று நடைபெற்ற வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில், ஒரு மாதத்துக்குப் பிறகு போட்டு உடைத்த பரிக்கர், அதற்காக நன்றி தெரிவித்தார்.
After the announcement of the Prime Ministerial candidate , is campaigning across the country , fly -blown hurricane Modi . He was speaking at a meeting in Patna campaign after a series of bomb attacks , his defense is much increased . Currently he is presented to the Prime Minister offered viviaipi security . Panaji, Goa 's capital , near the village of Modi 's grand campaign held last month . , Which attracted more than a million people . We chose the venue in the State Parrikar .
 
Top