சென்னை: மத்திய அரசின் சட்டத்தை மீறி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியாற்றுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு டிஜிபிராமானுஜம் 2011 மே மாதம் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அப்போதே, சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரிகள் 60 வயது வரை பணியாற்றலாம். 2012 நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. சுமார் ஓராண்டுக்கும் மேலாக அவர் சட்டம் ஒழுங்கு பிரிவை கூடுதல் பொறுப்பாகவே கவனித்து வந்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பை கவனிக்கும் ராமானுஜத்திற்கு ஏன் தற்காலிக பதவி வழங்கப்பட்டது என்று பலரும் குழப்பமாகவே கருதினர்.
இந்நிலையில், ராமானுஜம் திடீரென நவம்பர் முதல் வாரத்தில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதாவது, ஓய்வு பெறும் மாதத்தின் முதல் வாரத்தில் நியமிக்கப் பட்டார். உளவுத்துறை பதவியை அவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதுதான், தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் தொடர்ந்து 2 ஆண்டு பணியாற்றலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒரு பணியில் 2 ஆண்டுகள் பணியாற்றுவது குறித்து உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள, மத்திய, மாநில அரசுகள் அரசாணை களை பிறப்பிக்கலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில், தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இதனால், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் நவம்பர் மாதம் முதல் 2 ஆண்டு பணியில் இருக்க சட்டத்தில் இடம் ஏற்பட்டது. அதன்படி, அவர், 2014 நவம்பர் மாதம் வரை பணியில் இருக்கலாம். தமிழக அரசுதான் இந்த உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் இருந்தது. சமீபத்தில்தான் மத்திய அரசும் உத்தரவை பிறப்பித்தது. அதாவது ராமானுஜம் பணி நீட்டிப்பு பெறப்பட்ட பிறகே மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. ராமானுஜம், ஐபிஎஸ் அதிகாரி. இதனால் அவர் பணி நீட்டிப்புக்கு மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டும். தமிழக அரசின் சிறப்பு அரசாணைப்படி அவர் பணி நீட்டிப்பு பெறப்பட்டதை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அளித்தது.
ஆனால், அந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2012 நவம்பர் மாதம் முதல் ராமானுஜத்துக்கு மத்திய அரசு சம்பளம் வழங்கவில்லை. ஒரு டிஜிபி பதவி காலியாக இருப்பதாகவே மத்திய அரசு கணக்கிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ராமானுஜமும் சம்பளம் பெறாமலேயே கடந்த 15 மாதங்களாக பணியாற்றி வருகிறார். மேலும், உச்சநீதிமன்றம் ஒரு விதிமுறை வகுக்கும்படிதான் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு சமீபத்தில் விதிமுறை வகுத்து அறிவித்தது. ஆனால், மத்திய அரசின் சட்டத்தில் ஒரு ஊழியர் 60 வயது வரை மட்டுமே பணியில் இருக்கலாம். அதன்பின் பணி நீட்டிப்பு 3 மாதங்களுக்கு பெறலாம். அதையும் மீறி பணியாற்றுவது மத்திய அரசின் சட்டத்துக்கு முரணானது என்று கூறித்தான் அவருக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ராமானுஜம், தமிழக அரசின் சட்டப்படி 2 ஆண்டு பணியாற்றுகிறார். இதுதான் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு பதவி குறித்து சட்டச் சிக்கல் உருவானது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இதனால்தான், ராமானுஜம் பதவி நீட்டிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர் 3 ஆண்டு ஒரே பதவியில் நீடிக்க முடியாது. அதன் படி வரும் மே மாதத்துடன் ராமானுஜம் 3 ஆண்டு நிறைவு செய்கிறார். அதன்படியும் அவர் தேர்தல் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது போலீஸ் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிஷனில் ராமானுஜம், உறுப்பினர் செயலராக பணியாற்றினார். அப்போது அவர் 534வது பரிந்துரையில், சிறப்பு பதவி உயர்வு வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், பதவி நீடிப்பு வழங்குவது குறித்து, அரசுக்கு அவர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
அப்படி கடும் விதிமுறைகளை பின்பற்றும் ஒருவர், மத்திய அரசின் சட்டத்தை மீறி சட்டம் ஒழுங்கு பணியில் நீடிக்கிறார் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் அவரது பணி நியமனத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த மனு மீது பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் அவரை சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து வேறு பணிக்கு மாற்றினால், தமிழக அரசின் சிறப்பு அரசாணைப்படி சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுகிறவர்தான் 2 ஆண்டு பணியில் இருக்க முடியும். ராமானுஜம், வேறு பணியில் 60 வயதுக்கு மேல் நீடிக்க முடியாது. அதனால் அவர் ஓய்வுபெறும் சூழ்நிலை ஏற்படும்.
அந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக அவர் ஒரு மாதம் விடுமுறையில் செல்ல உள்ளதாகவும், பின் தேர்தல் முடியும்வரை விடுமுறையை நீடிப்பு செய்வார். தேர்தல் முடிந்ததும், மீண்டும் சட்டம் ஒழுங்கு பணிக்கு திரும்புவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக டிஜிபி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, இப்போது தாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
Chennai : Tamil Nadu violation of federal law to work in law enforcement combat tabloid reports . Tijipiramanujam law in May 2011 and was appointed DGP intelligence . At the time , law and order, in addition to the post of DGP was ordered to listen . IPS officers can work up to 60 years old . It was in November 2012 with his retirement . Responsible for about more than a year , he oversaw the addition of the Law and Order section . Responsibility to maintain law and order notice to the DGP ramanujattirku temporary post that was given so many people felt it was confused .இந்நிலையில், ராமானுஜம் திடீரென நவம்பர் முதல் வாரத்தில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதாவது, ஓய்வு பெறும் மாதத்தின் முதல் வாரத்தில் நியமிக்கப் பட்டார். உளவுத்துறை பதவியை அவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதுதான், தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் தொடர்ந்து 2 ஆண்டு பணியாற்றலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒரு பணியில் 2 ஆண்டுகள் பணியாற்றுவது குறித்து உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள, மத்திய, மாநில அரசுகள் அரசாணை களை பிறப்பிக்கலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில், தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.