GuidePedia

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள திரையரங்குகளில் இந்திய சினிமாக்களை திரையிட பாகிஸ்தான் அரசு அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என வினியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் இந்திய சினிமாக்கள் சக்கைபோடு போடுவது வழக்கம். இந்திய சினிமாக்களுக்கு அங்கு பெரிய ரசிகர் வட்டாரமே உள்ளது. அமிதாப், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோரின் படங்கள் பல நாட்கள் அங்கு ஓடும். இதனால் இந்தியாவில் பிரபலமான திரைப்படங்களை வாங்குவதற்கு, பாகிஸ்தான் வினியோகஸ்தர்கள் போட்டிபோட்டு வந்தனர்.இந்நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு திடீரென பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறும்போது, ÔÔபாகிஸ்தான் அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள தகவல் ஒளிபரப்புத்துறையின் புதிய விதிகள் மற்றும் சட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. எனவேதான் தற்போது புதிய இந்திய சினிமாக்களை திரையிடுவதற்கான அனுமதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுÕÕ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தானின் பிரபல சினிமா வினியோகஸ்தரும், கராச்சியில் மிகப்பெரிய சினிப்ளக்ஸ் அரங்கின் அதிபருமான நவாப் சித்திக்கி கூறுகையில், ÔÔஇந்திய சினிமாக்களை திரையிடுவதற்கான அனுமதி சான்றிதழ் வழங்குவதை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் நிறுத்தி விட்டது. இதனால் இந்தியாவின் புதிய சினிமாக்களான குண்டாய், ஹசிதோ பாசி போன்ற படங்களை திரையிட முடியாத நிலை உள்ளது. அரசின் நடவடிக்கையால், கராச்சி உள்பட பல்வேறு நகரங்களிலும் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்ÕÕ என்றார்.கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இந்திய சினிமாக்களை பெரிய மால்களில் திரையிடுவதற்கு அனுமதி வழங்கியது. இதனால் திரையரங்கு துணை வர்த்தகத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்திய படங்களுக்கு அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் வினியோகஸ்தர்களும், வர்த்தகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு, கடந்த 40 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு, இந்திய சினிமாக்களுக்கு தடை விதித்திருந்தது. இருந்த போதிலும் ஏராளமான திருட்டு சிடிக்கள் மூலமாக இந்திய சினிமா பாகிஸ்தானில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது.
 
Top