மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளுக்காக 55 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
வாக்குச் சாவடிகளின் நடவடிக்கைகள் மற்றும் வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் தொடர்பில் அந்த உத்தியோகத்தர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment