வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றுக்கு முன்பாக வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
பத்திரிகை நிறுவனத்தின் பத்திப்பக பணிகளை முடித்து இன்று நேற்றிரவு 9.30 மணியளவில் அலுவலகத்தை மூடிய சமயம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளொன்றே வெடித்துள்ளதாகவும் எனினும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
இது தொடர்பாக பத்திகை நிறுவனத்தின் இயந்திரப்பகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பத்திரிகையின் பதிப்புகள் நிறைவடைந்த நிலையில் அலுவலகத்தை மூடி வெளியேறியிருந்த சமயம் அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நின்றவர்கள் ஏதோவொரு பொருளை எரிந்த போது அது வெடித்தது.
இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு சம்பவம் தெடர்பில் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment