GuidePedia

0


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் இலங்கையும் ஜேர்மன் நாட்டின் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இன்று பால் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை திறந்து வைத்துள்ளன.
இந்த நிகழ்வு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஜர்கன் மொஹாட் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையம் திறக்கப்பட்டதனூடாக சாவகச்சேரி மற்றும் மீசாலை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top