நியூயார்க் நகரில் குப்பை அள்ளுபவர் $20 பணத்தை வலுக்கட்டாயமாக டிப்ஸ் கேட்டு வாங்கியதால் $1500 அபராதம் விதிக்கப்பட்டர்.
நியூயார்க் நகரை சேர்ந்த Lenworth Dixon என்ற 56 வயது குப்பை அள்ளும் ஊழியர், ஒரு வீட்டில் மிக அதிகமாக குப்பைகள் இருந்ததால், அந்த குப்பைகளை அள்ளுவதற்கு $20 பணம் டிப்ஸ் கேட்டார். அதற்கு வீட்டு உரிமையாளர் மறுத்தால், குப்பையை எடுக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். அதனால் வேறு வழியில்லாமல் வீட்டு உரிமையாளர் லஞ்சப்பணத்தை கொடுத்துவிட்டு, அவரது மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த New York City Department of Sanitation அதிகாரிகள், Lenworth Dixon டிபஸ் வாங்கியது உண்மை என்பதை தெரிந்து கொண்டபின்னர், அவருக்கு $1500 அபராதம் விதித்தனர்.
நியூயார்க் நகரில் மக்கள் சேவை செய்பவர்கள் யாரும் வாடிக்கையாளர்களிடம் வலுக்கட்டாயமாக டிப்ஸ் வாங்கக்கூடாது என்ற விதி, கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும், இதை மீறுபவர்களுக்கு கண்டிப்பாக தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment