GuidePedia

0
டொரண்டோவில் நேற்று இரவில் நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமான இரண்டு குற்றவாளிகளை டொரண்டோ போலீஸார் தேடிவருகின்றனர்.
டொரண்டோவில் நேற்று இரவு 26 வயது Peter Nguyen என்பவர், பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் நேற்று இரவு 9.20 மணிக்கு டொரண்டோவில் உள்ள pizzeria on Yonge Street, just north of Teddington Park Avenue, என்ற பகுதியில் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துவரும் Const. Sarah Diamond அவர்கள் கூறியபோது, இந்த துப்பாக்கி சம்பவம் தொடர்பான இரண்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும், அவர்கள் இருவரும் டார்க் நிறத்தில் உடையணிந்து இருந்ததாகவும், இரவு நேரம் என்பதால் வேறு அடையாளங்கள் காணப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 416-808-7400 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

Post a Comment

 
Top