GuidePedia

0
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவில் காணாமல் போன டொரண்டோ நபரை தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் பொதுமக்களின் ஒத்துழைப்பை மீண்டும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Lioudakis என்ற 40 வயது நபர் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோ கிளம்பி சென்றார். மெக்சிகோவில் Crowne Plaza என்ற ஓட்டலில் தங்கிய அவர், ஒரு வாரத்திற்கு பின்னர் ஓட்டல் அறையை காலி செய்தார். அதன் பின்னர் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை.
டொரண்டோவில் உள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் Lioudakis காணாமல் போனதாக மெக்சிகோ காவல்துறையினர் அறிவித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை காணாமல் போன Lioudakis குறித்த விவரங்களை வெளியிட்டு காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
காணாமல் போன Lioudakis புகைப்படத்தை வெளியிட்டுள்ள டொரண்டோ போலீஸார் அவரை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் 416-808-1400. என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top