GuidePedia

பாஸ்ட் எண்ட் பியூரியஸ் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் தனது சொத்துகள் அனைத்தும் அவரது மகளுக்கு விட்டுச்சென்றுள்ளார். 

நடிகர் போல் வோகர் அவரது 40 வயதில் கடந்த நவம்பர் மாதம் கார் விபத்தொன்றில் இறந்தார். வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போல் வோகர் தனது சொத்துகள் அனைத்துக்கும் தனியான உரிமையாளராக 15 வயதான மகள் மிடோ வோகர் என உயில் எழுதி வைத்துள்ள தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.

25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 326 கோடி ரூபா) பெறுமதியான இச்சொத்துகள் அனைத்தும் மகள் மிடோ வோகருக்கு உரித்தானது என உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வுயிலில் இச்சொத்துகளுக்கு போல் வோகரின் தந்தையை அதிகாரமுடையவர் எனவும் மிடோ வோகரின் தாய் ரெபேக்கா விரும்பின் மிடோ வோகருக்கு போல் வோகரின் தாய்  கவலாளியாகவும் நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிலில் உள்ளது போல மகனின் அறிவுறுத்தல்களின் படி போல் வோகரின் தந்தை முறையான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை தனது மகள் மிடோ கலிபோர்னியாவில் போல் வோகரின் தாயுடன் இருக்க ரெபேக்கா சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை இந்த மாத இறுதியில் நடைபெறும் எனக் கூறப்படுகின்றது.



 
Top