4 வயது மகனின் அழு குரலால் எரிச்சலடைந்த
தந்தையொருவர் மகனது வாயை பூட்டால் பூட்டி அடித்து, உதைத்து, சித்திரவதை
செய்து, படுகொலை செய்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.
லாகோஸ் பிராந்தியத்திலுள்ள மியான் லாகோஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ் எல்விஸ்,
(30வயது) என்ற நபரே தனது 4 வயது மகன் கோட்றிச்சை இவ்வாறு வாயை பூட்டால்
பூட்டி சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார்.
கிறிஸ் தனது மகனின் உடல் எங்கும் இரும்புக் கோலால் சூடு வைத்ததுடன் அவனை பிளாஸ்ரிக் பீப்பாவொன்றில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்நிலையில் சந்தையிலிருந்து திரும்பிய தாயார் தனது மகன் கொடூரமான
முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸில்
செய்த முறைப்பாட்டையடுத்து கிறிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment