GuidePedia

0


அசாம் மாநிலத்தை அச்சுறுத்தி வரும் தீவிரவாத குழுக்களில் ஒரு பிரிவினரான என்.டி.எஃப்.பி சோங்பிஜித் தீவிரவாத குழு அரசுடனான சமரசப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்த தீவிரவாத குழுவை சேர்ந்த சிலரை பிடிக்க தலைக்கு ரூ.5 லட்சத்தை பரிசாக காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், அவர்கள் சோனிட்பூர் மாவட்டத்திற்கு அருகேயுள்ள பலிசாங் பகுதியில் பதுங்கியிருப்பதாக அந்த மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சுக்தா பராசர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். போலீசாரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.

சில நிமிடங்கள் வரை நீடித்த இந்த என்கவுன்டரில் தீவிரவாதிகளில் ஒருவனான பிகாரி என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான். படுகாயமடைந்த மற்றொரு தீவிரவாதியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட பிகாரியின் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியாக அசாம் காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top