GuidePedia

பிரிட்டனில் ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளும், பலாத்கார கொடுமைகளும் பரவலாக பேசப்பட்டாலும் அது ஆண்களுக்கு என்று வரும்பொழுது கூக்குரல் ஒன்றும் ஒலிப்பதில்லை.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான புள்ளிவிவரம் பற்றி பொலிசார் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களில் மொத்தம் 2,164 ஆண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பெரும்பாலும் இச்சம்பவங்களில் பாதிக்கப்படும் ஆண்கள் புகார் தெரிவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்திலிருந்து விடுப்பட்டு பிறரை போல் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரை, மனநல ஆலோசனைகளை வழங்க 5,00,000 யூரோக்கள் நிதியை இங்கிலாந்து அரசு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டேமியன் கிரீன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Top