இந்தியாவின் மிகப் பிரபலமான கார் மாடலான மாருதி-800 உற்பத்தி கைவிடப்பட்டதாக மாருதி சுஸýகி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மாருதி சுஸýகி நிறுவனத்தின் செயல் இயக்குநர் சி.வி.ராமன் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை கூறியது: ஜனவரி 18-ஆம் தேதி நிலவரப்படி, மாருதி-800 கார் உற்பத்தி ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த மாடலுக்கான உதிரி பாகங்கள் தொடர்ந்து கிடைக்கும். எங்கள் நிறுவன விதிமுறைப்படி, இந்த மாடல் உரிமையாளர்களின் தேவையை சந்திக்க, இதற்கான அச்சு உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் நிறுவனத்திடம் இருந்துவரும் என்று தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முன், சுமார் ரூ. 50,000 விலையில் அறிமுகமான இந்த அடிப்படை மாடல், இந்திய கார் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது, கையிருப்பில் உள்ள காரின் விலை சுமார் 2.35 லட்சமாகும்.
