GuidePedia

நியூயார்க்
அமெரிக்காவை சேர்ந்தவர் மேகன் ரீஸ் ( வயது 84 ) கன்னியாஸ்திரீ இவர் ஆணு ஆயுத எதிர்ப்பாளர்.இவர் அணு ஆயுதங்களுக்கு எத்ர்ப்பு தெரிவித்து கடந்த 2012 ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க டென்னெஸி மாகாணத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் அத்துமீறி நுழைந்தனர்.அங்கிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்து  உள்ளே நுழைந்து, அங்கு அணு ஆயுத எதிர்ப்பு பேனர்களை தொங்கவிட்டனர்., இதை தொடர்ந்து  3பேரும் கைது செய்யபட்டனர்.
இந்த வழக்கில் மேகனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறப்பட்து. நீதிமன்றத்தில் இருந்த சகோதரி மேகன், தான் செய்த செயல் குறித்து தனக்கு எந்த வித வருத்தமும் இல்லை என்றும், இதைச் செய்வதற்கு தான் 70 ஆண்டுகள் காத்திருந்தேன் என்பது குறித்து மட்டுமே தனக்கு வருத்தம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் மற்ற இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கபட்டது.
 
Top