அனைத்து மதங்களின் தலைவர்களும் இந்தியாவின் மதநல்லிணக்க பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்ற அமைதி மற்றும் மதநல்லிணக்கம் குறித்த கூட்டத்தில் பேசிய தலாய்லாமா “நவீன இந்தியா பொருள்சார்ந்ததாக மாறிவி்ட்டது. இன்றைய இளைஞர்கள் ஆன்மீகத்தைவிட பணத்தை பற்றியே அதிகம் பேசுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்பது உடலுக்கு மட்டுமே ஆறுதலை கொடுக்கும், மனதுக்கு ஆறுதல் அளிக்காது, என்பதை மதத்தலைவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் எடுத்துக்கூற வேண்டும்.” என்று கூறினார்.
மேலும் “மனித மதிப்புகளை மேம்படுத்துவதிலும், மதநல்லிணக்கத்தை கல்வியின் வாயிலாக கொண்டு செல்வதிலும் நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இந்தியாவின் 1000ம் ஆண்டு பழமையான ஆன்மிகத்துடன் கூடிய பொருள்சார்ந்த வளர்ச்சியின் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.
பள்ளிகளில் உடல் தூய்மையை மட்டுமே போதிக்காமல் மனத்தூய்மையையும் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றும் தலாய் லாமா கேட்டுக்கொண்டார்


Post a Comment