மதுரை: மதுரையில், சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர் இல்ல திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, 'போஸ்டர் ஒட்டினார்கள் என்ற குற்றத்திற்காக, எனது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினர். அதை தட்டிக்கேட்ட என்னையும் நீக்கினர். நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால், வரும் தேர்தலை எப்படி சந்திப்பது,' என்று பேசினார்.
