GuidePedia

0

060b0907-682_1444000a

கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் கடந்த மாதம், ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு, குழந்தை ஒன்று பிறந்தது.பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த இக்குழந்தை, வெளிறிய நிலையில் காணப்பட்டது.சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் சோதனை செய்த பார்த்த போது, குழந்தையின் உடலில் ஒருதுளி ரத்தம் கூட இல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் கணிப்பின் படி இக்குழந்தை கிட்டதட்ட 80 சதவிகித ரத்தத்தை தாயின் கர்ப்பத்திலேயே இழந்துள்ளது, இது கடுமையான ரத்த சோகையைக் குறிக்கிறது.பிரசவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்பே, குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லாததால் மருத்துவரை அணுகியுள்ளார் ஜெனிபர்.இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையும், தாயும் காப்பாற்றப்பட்டனர்.

ஜெனிபரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே அவரையும்,அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இக்குழந்தை உயிருடன் பிறந்தது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது, இக்குழந்தையை பரிசோதித்த பிறகே நேரடியாக கருவிலேயே ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம் என சாரோன் பிலிகிரிம் என்ற நர்ஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top