GuidePedia

0
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவ சீருடையை ஒத்த உடையில் நடமாடிய நபரை நேற்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், பேருந்து நிலையத்தில் இராணுவ சீருடையை ஒத்த உடையில் அங்குமிங்கும் நடமாடித் திரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனை அங்கு கடமையிலிருந்த பொலிஸாரும் அவதானித்ததையடுத்து குறித்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top