GuidePedia

0
இறுதி நேரம் வரை காத்திருக்காது முன்கூட்டியே சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சி பிரதானிகளிடம் தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 30ம் திகதி தொடக்கம் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் 6ம் திகதி பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவுபெறும்.
சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல் 5ம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறும்.
இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எனினும் சில சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டரை நாட்களே எஞ்சியுள்ளதென தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இறுதி நேரம் வரை காத்திருக்காது முன்கூட்டியே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

 
Top