GuidePedia

பீஜிங்: நிறைய சாப்பிடாதே வயிறு வீங்கி வெடிக்க போகுது என்று கிண்டலுக்கு சொல்வார்கள். அது உண்மையாகவே நடந்துள்ளது. மூச்சு முட்ட மது குடித்து விட்டு, பின்னர் அதிக சாப்பாடு சாப்பிட்ட பெண்ணின் வயிறு பெருத்து வெடித்துள்ளது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கடந்த ஒரு வாரமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்கள் ஒன்று சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆடி பாடி வருகின்றனர். ஜியாங்சூ மாகாணத்தை சேர்ந்த 58 வயது பெண், கடந்த 6ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தில் உற்சாகமாக மது அருந்தினார்.

மூச்சு முட்ட குடித்த பிறகு, அதிகமாக உணவும் சாப்பிட்டுள்ளார். அவருக்கு திடீரென வயிறு வீங்கி வலி அதிகரித்தது. அதனால் நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையில், அந்த பெண்ணை சேர்த்தனர். அதற்குள் வயிறு பெருத்து வலியில் துடித்தார். டாக்டர்கள் அவசர அவசரமாக அவரை பரிசோதித்தனர். உடனடியாக ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்ணின் வயிற்றை ஆபரேஷன் செய்து கொண்டிருந்த போதே, டமார் என்ற சத்தத்துடன் வயிறு வெடித்து உள்ளே இருந்த ஆல்கஹால், உணவு பீறிட்டது. டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் பதற்றப்படாமல், பெண்ணின் குடல் பகுதியை ஆபரேஷன் மூலம் முற்றிலும் அகற்றி உள்ளனர். இதுகுறித்து பெண் ணுக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் வாங் ஹோ கூறியதாவது:சாதாரணமாக சாப்பிடும் போது, வயிறு நிறைந்ததும் போதும் என்ற உணர்வு ஏற்படும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். ஆனால், மது அருந்தி இருக்கும் போது, அதுபோன்ற உணர்வை உடல் ஏற்படுத்தினாலும் போதையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். வயிறு வீங்கி வலியுடன் வந்த பெண்ணுக்கு எலக்ட்ரிக் சர்ஜிக்கல் கத்தி மூலம் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது எத்தில் ஆல்கஹால் கத்தியில் பட்டு வயிறு வெடித்தது. அப்போது திடீரென தீப்பிழம்பும் ஏற்பட்டது. அளவுக்கதிகமாக மது அருந்தி உணவு சாப்பிட்டால் வயிறு வீங்கி விடுவது வழக்கம். எப்போதாவது வயிறு வெடிக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனால், வயிற்றுக்குள் இருக்கும் காஸ் வெளியேறி தீப்பிடிப்பது அரிதிலும் அரிது. அதுபோன்ற நேரங்களில் சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் ஏற்படும்
 
Top