சென்னை : மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஒரு வாலிபர் நிர்வாண நடனமாடினார். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் மெரினாவில் நேற்று காலை திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே வாலிபர் ஒருவர் நேற்று காலை நின்று கொண்டு இருந்தார். திடீரென அவர் தனது மேல் மற்றும் கீழ் ஆடைகளை கழற்றி சாலையில் செல்வோர் முகத்தில் வீசினார். அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்களிடம் கலாட்டா செய்தார். இதனால், மக்கள் சிதறி ஓடினர்.முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்திற்கு செல்லும் நேரம் என்பதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.அவர்களும் அதை கண்டு கொள்ளவில்லை. வாலிபரின் செயல் அத்து மீற ஆரம்பித்தது.
சாலை நடுவில் நின்று கொண்டு நடனமாட ஆரம்பித்தார். அப்போது, அந்த வழியாக திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வந்தார். அவர் அங்கு நின்ற போலீசார் உதவியுடன் வாலிபரை பிடிக்க முயன்றார்.இதை கண்டதும் வாலிபர் உழைப்பாளர் சிலை பகுதியில் இருந்து காந்தி சிலை நோக்கி காமராஜர் சாலையில் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், நிர்வாண வாலிபருக்கு ஆடை ஏற்பாடு செய்து அணிய செய்தனர். தொடர்ந்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். நிர்வாண வாலிபர் செய்த சேட்டையால் மக்கள் நடமாட்டம் மிகுந்த மெரினாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment