ஜேர்மனியில் நபர் ஒருவர் குதிரையை பாசத்துடன் பாராமரித்து வருகிறார். ஜேர்மனியின் வடக்கு பகுதியில் பெலென்ஸ்பெர்க் நகரில் ஸ்டிபனி ஆர்ன்டிட் என்ற நபர் வசித்து வருகிறார்.
இவர் வசிக்கும் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கடும் புயல் வீசியது.அப்போது ”நாசர்” என்ற 3 வயது குதிரை ஸ்டிபனியின் வீட்டில் ஒதுங்கியதுடன், காலப்போக்கில் அவ்விடத்திலேயே வாழத்தொடங்கிவிட்டது.
தற்போது இதை வளர்த்து வரும் ஸ்டிபனி கூறுகையில், நாசர் எதையும் அறிவதில் மிகுந்த ஆர்வமுடையது, அதற்காகவே தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிப்புகளை உண்டபடியே கீபோர்ட் வாசிப்பது போன்ற மனித பழக்க வழக்கங்களும் நாசரிடம் உள்ளது என்றும் இதனை தான் பாசத்துடன் அரவணைத்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
