சுவிஸ் நாட்டில் வைரவியாபரி ஒருவர் மர்மநபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார். சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த வைர வியாபாரிக்கு இடைத்தரகர்கள் மூலம் வந்த தொலைபேசி தகவலின்படி, இத்தாலிய வைர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள பலநூறு பிராங்குகள் அளிக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், சூரிச் ஹோட்டல் ஒன்றில், கலந்தாய்வு அறையில் சுவிஸ் வைர வியாபாரியும், முகம் தெரியாத இரண்டு நபர்களும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பணத்தை கைமாற்றிக்கொண்டனர்.
இதன்பின் பணத்தை பெற்ற வைர வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பணத்தை சோதனை செய்ததில், அவை அனைத்தும் போலி பிராங்குகள் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
