மாடறுப்பிற்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன் பெற்றோல் பாத்திரத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இவர் தற்கொலைக்கு எத்தனித்ததாகப் பொலிசார் தெரிவித்தனர். அப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றால் அது நாட்டில் பாரிய இன முருகலைத் தோற்றுவித்திருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சூரியவௌ தர்மதூர் ஆச்சிரமத்தின் தம்பதெனியே தம்மதின்ன தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment