GuidePedia

ஐதராபாத்: அணுசக்திக்கு தேவையான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
அணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம்(யு6 மற்றும் யு4+ ) வகையை சேர்ந்த யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் அச்சம்பேட் மண்டல் பகுதியை சேர்ந்த அக்காவரம் கிராமத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல இந்தியா இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஜெர்மனி , பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின்வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தகைய கனிம வளம் இருப்பது கண்டுப்பிடித்திருப்பது இது தான் முதல் முறையாகும். 
இயாந்தினைட் கனிம வளம் முதன் முறையாக காங்கோவில் 1920-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. தற்போது அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த பி.எஸ். பாரிகர், எஸ்.கே. ஸ்ரீவத்சவா, யமுனாசிங், கே.கே. பரஸ்கார், பி.வி.ரமேஷ்பாபு, மற்றும் ஆர். விஸ்வநாதன் ஆகியோர் இதனை கண்டு பிடித்துள்ளனர். இயாந்தினைட் கனிம வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்
 
Top