GuidePedia

0
(வத்துகாமம் நிருபர்)
 
லக்சபான நீர்த்தேக்கத்தில் நீராடிய இளைஞர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக நல்ல தண்ணிப் பொலிசார் தெரிவிக்கின்றனர். 
 
நுவரெலியா ஹாவா எலிய பிரதேசத்தைச் சேர்ந்த தயாபாலன் பிரபு என்ற 19 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி மரணமானதாக தெரியவருகிறது.
 
லக்சபான பிரதேசத்தில் உள்ள ஒரு உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருந்த போது மதுபோதையில் நீராடச் சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top