எம்.இஸட். ஷாஜஹான்
இனப்பெருக்க காலத்தில் பிடிக்கப்பட்ட
சிங்கி இறால்களை கடலில் விடுவிக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம்
நேற்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் நீர்கொழும்பு மாவட்ட
அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நீர்கொழும்பு - கெபுன்கொடை கடற்பகுதியில் வலைகள் மூலம் கூண்டில்
அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் நிறை கொண்ட 40 ஆயிரம் ரூபா
பெறுமதியான 33 சிங்கி இறால்களே நீதிமன்ற உத்தரவின் பேரில் தூவ பிரதேசத்தில்
ஆழமான கடற் பகுதியில் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டன. இதற்கான உத்தரவை
நீர்கொழும்பு மேலதிக நீதவான் பி. ஏம்.டி. பண்டார உத்தரிவிட்டார்
Post a Comment