GuidePedia

0
சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வரலாற்றில் முதன் முறையாக பெண் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சவுதியின் ஜெட்டாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான சவுதி கெஸட் என்ற பத்திரிகையின் ஆசிரியராக சுமையா ஜபர்தி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து சுமையா ஜபர்தி கூறுகையில்,
 
இப்போது தான் கட்டுப்பாடுகள் என்ற கண்ணாடி மாளிகையின் மேற்கூரை விரிசல் விட்டுள்ளது, விரைவில் வாசற்கதவும் விரிவடையும் என நம்புகிறேன்.
 
எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பணியின் மூலம் சவுதியில் வாழும் பல பெண்கள் அடுத்தடுத்து ஊடக துறையில் தடம் பதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top