GuidePedia

0


என் திருமணம் சரியான நேரத்தில் நடக்கும். என் அம்மாவின் ஆலோசனைப்படிதான் திருமணம் செய்வேன், என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.
இதன் மூலம் தன் வருங்காலக் கணவர் யார் என்பதை முடிவு செய்யப் போகிறவர் தன் அம்மாதான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

சிம்பு – ஹன்சிகா காதல் கிட்டத்தட்ட முறிந்துவிட்டதாக ஊடகங்கள் உறுதிப்படுத்தி, நாலு கைப்பிடி மண்ணையும் அள்ளிப் போட்டுவிட்டன.

அதற்கேற்ற மாதிரி அவ்வப்போது சிம்புவும் ஹன்சிகாவும் மீடியா வாய்க்கு அவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நயன்தாரா என் தோழி, ஹன்சிகா என் காதலி என்றெல்லாம் சிம்பு கூறிக் கொண்டிருக்க, ஹன்சிகாவோ நான் தனி ஆள். எனக்கு துணை யாருமில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று தன் திருமணம் குறித்தும் பளிச்சென்று பேசியிருக்கிறார். அதில் தன் திருமணம் நடக்கும்போது நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், “ரசிகர்கள் எனது திருமணம் பற்றி பேசுகிறார்கள். 15 வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை. ஆனால் அது நடந்தது அதுபோல் எனக்கு திருமணம் சரியான நேரத்தில் நடக்கும்.

நானும் எனது தாயும் எப்போது என்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்போது திருமணம் செய்து கொள்வேன். என்னிடம் தற்போது 10 படங்கள் கைவசம் உள்ளன. என் படங்களுக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.. படங்கள் முடிந்ததும் திருமணம் குறித்து யோசிப்பேன்,” என்றார்.

ஹன்சிகாவின் அம்மா மோனாவுக்கு ஆரம்பத்திலிருந்தே சிம்புவைப் பிடிக்காது. இதை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இப்போது அம்மா சொல்லும் மாப்பிள்ளையையே மணப்பேன் என ஹன்சிகா சொல்லியிருப்பதன் மூலம், சிம்புவுக்கு அவர் வாழ்வில் இடமில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Post a Comment

 
Top