GuidePedia


Sraya



விவேக்கின் பிச்சைக்கார கதாபாத்திரத்தை நினைத்து பார்த்து சிரிக்கிறார் ஸ்ரேயா. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரேயா தரிசனம் தந்த சந்திரா படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சுவையான சம்பவம் நடந்துள்ளது.
இந்தப்படத்தில் நடிகர் விவேக்கும் நடித்திருக்கிறார். நியூயோர்க் நகரத்தில் விவேக் பிச்சையெடுப்பது போன்ற ஒரு காட்சி இப்படத்திற்காக படமாக்கப்பட்டதாம்.
அப்போது விவேக்கை ஒரிஜினல் பிச்சைக்காரராகவே நினைத்துவிட்ட நியூயோர்க்வாசிகள் அவருக்கு பிச்சை போட்டுவிட்டு சென்றனராம்.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், எப்போது விவேக்கைப் பற்றி நினைத்தாலும் இந்தக் காட்சிகள் மனக்கண்ணில் தோன்ற, அதை நினைத்து விழுந்து விழுந்து சிரிப்பேன் என்று கூறியுள்ளார்
 
Top