தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்குப் பக்கம் போன பாவனா, அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் சிரமப்பட்டார். கடைசியாக கன்னட திரைப்படவுலகில் தஞ்சம் புகுந்தார்.
அங்கு சில திரைப்படங்களில் நடித்தார். இப்போது மைத்ரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் மலயாளத்தில் நான்கு திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.
கன்னட திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த போது பாவனாவுக்கு, நவீன் என்ற கன்னட திரைப்பட அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள்.
பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து பாவனா - நவீன் திருமணம் எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. திருமணம் கேரளாவில் நடத்துவதா? அல்லது பெங்களூரில் நடத்துவதா? என்பது பற்றி இரு தரப்பினரது பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment