வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கினால் இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் 2013 வெற்றிக் கிண்ணத்திற்கான வலிகாமம் லீக்கிற்குட்பட்ட கால்ப்பந்தாட்ட விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் விளான் அன்ரனீஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
விலகல் முறையில் நடைபெற்று வரும் மேற்படி சுற்றுப்போட்டியின் போட்டியொன்று இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போதுஇ ஈவினை கலைமகள் விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து பண்டத்தரிப்பு விளான் அன்ரனீஸ்; விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்து.
இரண்டாம் பாதி ஆட்டத்தில்இ விளான் அன்ரனீஸ் விளையாட்டுக் கழக அணி கோலொன்று பெற்று முன்னிலை பெற்றது. இருந்தும் அந்த முன்னிலையை நீடிக்கவிடாமல் கலைமகள் விளையாட்டுக் கழக அணியும் பதிலுக்கு ஒரு கோல் போட்டது.
ஆட்டநேரம் முடிவுக்கு வருகையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களினைப் பெற்றிருந்தன.
போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் விளான் அன்ரனீஸ் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
