இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் 07 பேரிடமிருந்து பட்டை தீட்டப்படாத 628 கிராம் தங்கநகைகளை சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை (22) கைப்பற்றியதுடன், 07 பேரையும் தடுத்துவைத்துள்ளனர்.
இரு இலங்கையர்களும் 05 இந்தியர்களுமே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 18.73 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை கைப்பற்றியதாகவும் சுங்க அதிகாரியொருவர் கூறினார்.

Post a Comment