இணையத்தளத்துடன் தொடர்பைக் கொண்ட உலகின் முதலாவது பற்தூரிகை அமெரிக்க நெவாடா மாநிலத்தின் லாஸ் வெகாஸ் நகரில் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
இந்த கொலிபிறி பற்தூரிகையிலுள்ள உணர் கலங்கள் பற்களை துலக்கும் போது பற்களிலுள்ள கனியுப்புப் படிமங்கள் எந்தளவுக்கு அகற்றப்படுகின்றன என்பதை கணிப்பிடுகின்றன.
இந்த பற்தூரிகையானது கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் கணினிக்கு தகவல் களை அனுப்புகிறது.

Post a Comment