அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசி சந்தையில் செம்சுங் நிறுவனம் Galaxy S5 தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிவேக Wi-Fi, Waterproof இணைப்பு, 16MP கெமரா, Smartwatch இணைப்பு,
என்ரோய்ட் கிற்கெட் 4.4 ஆகியவற்றுடன் நான்கு வர்ணங்களில் வெளியாகியுள்ளது.

இதன் விலை குறித்து செம்சுங் நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. எனினும்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்தத் தொலைபேசி சந்தைக்கு வரவுள்ளதாக
அறிவித்துள்ளது.
ஐபோன் 5S இல் உள்ளதைப் போன்று கைவிரல் அடையாள பாதுகாப்பு வசதி
காணப்படுகின்ற போதிலும் துல்லியமான கெமரா மற்றும் நீர்,தூசு
ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் திறன் போன்றவை பாவனையாளர்களை அதிகம்
ஈர்க்கும் என செம்சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Post a Comment