GuidePedia

0


அந்த ரயில் போக்குவரத்து மற்றும் கடல்வழி இப்போது தடைபட்டு போனாலும், அந்த நினைவுகள் இன்றும் இருதரப்பிலும் பசுமையாக இருக்கின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில்பாதையில் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போக்குவரத்து தொடங்கியது.
இந்தியாவிலிருந்து தனுஷ்கோடி வரை பாம்பன் பாலத்தின் ஊடாகப் பயணித்து, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று, மதவாச்சி வரை ரயில் மூலம் பயணிக்கும் போக்குவரத்து பல தசாப்த்தங்களாக நீடித்தது.
எனினும் 1964 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக தனுஷ்கோடிப் பகுதி முற்றாக அழிந்தபோது, ரயில் பாதையும் மறைந்து போனது.
தலைமன்னார் பகுதியில் சேதமான ரயில் பாதைகள்
பின்னர் இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை ஏற்பட்டு, அது யுத்தமாக மாறியதால், இலங்கைப் பகுதியில் தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையும் முற்றாக சேதமடைந்தது.
இதன் காரணமாக ஆங்கிலேயேர்கள் ஆரம்பித்த ரயில்-கடல்-ரயில் பயணம் நின்று போனது.
இப்போது இந்தியாவில் ராமேஸ்வரம் வரையிலான ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறது. இலங்கையில் தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியா-இலங்கை இடையே பாம்பன் பாலம் வழியாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரயில்-கடல்-ரயில் சேவை இருநாட்டிலும் பெரும் அனுகூலங்களை ஏற்படுத்தியதை இன்றும் பலர் நினைவுகூர்கிறார்கள்.
பாம்பன் பாலம் வழியாக இலங்கைக்கான ரயில் பயணம் இப்போது நின்றுபோயுள்ள சூழலில், தலைமன்னார் பகுதியில் அதன் தாக்கம் குறித்து அங்குள்ள முத்துராமன் செல்வராசா அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.

Thanks - BBC

Post a Comment

 
Top