முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, திரிமானேயின் 102 ஓட்டங்களின் உதவியுடன் 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 296 எனும் வெற்றியிலக்கை நிர்ணயித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 73 ஒட்டங்களையும் உமர் அக்மல் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய லசித் மாலிங்க, போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

Post a Comment