GuidePedia

0
கண்டி, கோமறை தோட்டம் நவதுனிஸ்கல பகுதியில் பெண் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் மூவர் பன்வில மடுல்கல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில், பெண் தொழிலாளி ஒருவர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக மடுல்கல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் சில பெண் தொழிலாளர்கள் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
நவதுனிஸ்கல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே, இன்று காலை 8 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Post a Comment

 
Top