சமீபத்தில் தோட்டா ராய் கூறிய விஜய் படத்தின் கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் படத்தின் கதை வேறு என்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய், சமந்தா, தோட்டா ராய் செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் தோட்டா ராய் சௌத்ரி அளித்த பேட்டியில், இப்படத்தின் கதையை கூறிவிட்டார் எனப்பட்டது.
அவர் சொல்லியதனடிப்படையில், கதையில், இவரைப் பிடிப்பதற்காக கொல்கத்தா பொலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜயைக் கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை எனப்பட்டது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் படத்தின் கதை இதுவல்ல என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தோட்டா ராய் செளத்ரி படத்தின் வில்லனே அல்ல, நாங்கள் படத்தின் வில்லனை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, கொல்கத்தாவில் படமாக்கப்பட்ட துரத்தல் காட்சிக்கு ஒருவர் தேவைப்பட்டது. அதற்காக மட்டுமே தோட்டா ராய் செளத்ரி நடித்துக் கொடுத்தார், படத்தின் கதையே வேறு என்றும் தெரிவித்திருக்கிறார்.

Post a Comment