இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையை கண்டித்து சென்னை அடையாரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 150 பேர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணிமுதல் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளை சுமந்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது சென்னை அலுவலகம் தெரிவித்தது.

Post a Comment