GuidePedia

0


காதலர் தினத்தன்று யுவதியொருவரிடம் முத்தம் கேட்ட இளைஞன் ஒருவன் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் 1500 ரூபாவை தண்டமாக செலுத்தியுள்ளார்.

வெள்ளவத்தையைச்சேர்ந்த யுவதியொருவர் தனது நண்பர்களுடன் காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார்.

அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச்சேர்ந்த இனந்தெரியாத இளைஞன், தனக்கு முத்தம் கொடுக்குமாறு யுவதியிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் குறித்த யுவதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தெமட்டக்கொடையைச்சேர்ந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் திலின கமகே 1500 ரூபாவையை தண்டமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Post a Comment

 
Top