GuidePedia

0


சீன ட்ரகன் உருவத்தை பச்சை குத்துமாறு கோரிய நபரின் முதுகில் 40 சென்ரி மீற்றர் நீளமான ஆணுறுப்பை வரைந்த குற்றத்திற்காக 'டாட்டூ' கலைஞர்கள் இருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்று  சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பிராந்தியத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வில்லியம் லோர்ட் (23), மெத்தியூ பிரான்சிஸ் பிரட்லி (24) ஆகியோருக்கே இச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இவர்களிடம் டாட்டூ வரைந்துகொள்வதற்காக வந்த நபர் ஒருவர் தனது முதுகில் சீன ட்ரகன் உருவத்தை டாட்டூவாக வரையுமாறு கோரினாராம்.



ஆனால், அந்நபரின் முதுகில் விதைகளுடன்கூடிய 40 சென்ரிமீற்றர் நீளமான ஆணுறுப்பை டாட்டூவாக இவ்விருவரும் வரைந்தனர். தனது முதுகில் வரையப்பட்ட டாட்டூவை மேற்படி நபர் நண்பர்களிடம் காட்டியபோதே அதில் ஆணுறுப்பு வரையப்பட்டுள்ளது என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம். டாட்டூவை வரைந்தபின் அந்நபரை தாக்கியதாகவும் மேற்படி இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.




இது தொடர்பாக இப்ஸ்விச் மாவட்ட நீதிமன்றில் நடைபெற்ற 12 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேவேளை பாதிக்கப்பட்ட நபரின் மேற்படி ஆணுறுப்பு வடிவ டாட்டூவை இலவசமாக அழிப்பதற்கு இப்ஸ்விக் நகரைச் சேர்ந்த மற்றொரு டாட்டூ கலைஞர் முன்வந்துள்ளார்.

Post a Comment

 
Top