உலகின் மிகப்பெரிய இணைய தேடல் பொறியான கூகுளுக்கு பிரான்ஸில், 100 கோடி யூரோ (சுமார் 17,645 கோடி இலங்கை ரூபா) வரி விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பாரிஸ் அலுவலகத்தில் அதன் கணக்குகள் தொடர்பாக பிரெஞ்சு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைடுத்து இவ்வரியை செலுத்துமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
கூகுள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு பிரான்ஸில் 192.9 யூரோ வருமானம் பெற்றதாகவும் 6.4 மில்லியன் யூரோ வரியாக செலுத்தியதாகவும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 ஆம் ஆண்டு 140 கோடி யூரோ வருமானத்தை கூகுள் நிறுவனம் பெற்றதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் விளங்குகிறது. அங்கு அதிக பட்ச வருமான வரி 75 சதவீதமாக உள்ளது.
